India

நளினி, முருகன் வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடம் பேச அனுமதிக்கவேண்டும் – உயர் நீதிமன்றம் பரிந்துரை

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் பேச ஒரு நாள் அனுமதியளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை, லண்டனில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது,தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்த கடிதத்தின் நகலையும் சமர்ப்பித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடிதத்தில் அனுமதிதான் கேட்டுள்ளீர்கள், ஏன் பரிந்துரை செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மீண்டும் இன்று இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன் பாதுகாப்பு காரணங்களுக்காக கைதிகளை வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேச அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதிகள், நளினி முருகன் ஆகியோருக்கு, வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் பேச ஒரு நாள் மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த நாள் எப்போது என்பது குறித்து வருகிற திங்கட்கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

1 + nineteen =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App

© 2018 | All Rights Reserved

To Top
WhatsApp WhatsApp us