Tamilnadu

திமுக 2021இல் ஆள வர கூடாது

எந்தெந்த பிரச்சனைகளை முன்னெடுத்துக் காட்டி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது என்று தெரிந்து கொள்வது நமக்கு முக்கியம். அது மட்டுமல்ல அந்த பிரச்சினைகளை பூதாகாரமாக்கி அவற்றின் மூலமாக தமிழகத்தை அழித்த கதையும் இங்கு முக்கியமானதே.

பலவீனமான காங்கிரஸ் கட்சி, மாநிலத்திற்கு உகந்த உதவி மத்திய அரசிடம் இருந்து இல்லாமல் இருந்ததாலும், பக்தவத்சலம் முதல்வராக கூறிய தகாத கருத்துக்களும், பஞ்சம் என்று வந்து மக்களை வாட்டி எடுத்ததாலும் நிலைமை படு மோசமாக இருந்த போது தான், முன் யோசனையோ சமயோசிதமோ இல்லாமல் மும்மொழித் திட்டம் என்று ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அது திமுகவினருக்கு மிகவும் சாதகமாக அமைந்து, அவர்கள் பதவிக்கு வர உதவியாக இந்தித் திணிப்பு எதிர்ப்பு கொள்கையை முன்னிறுத்த ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்திற்குப் புதிது இல்லை. 1937-இல் இருந்தே இந்த புகை இங்கு புகைந்து கொண்டு தான் உள்ளது. மூன்று வருடத்திற்குப் புகைந்து விட்டு அடங்கிய போராட்டம், மீண்டும் 1953-இல் கருணாநிதி மூலம் மீண்டும் துளிர் விட்டது. கல்லக்குடி என்ற ஊரில் டால்மியா என்ற வாடா இந்தியர் ஒரு சிமெண்ட் தொழிற்சாலை நிறுவித்ததால் அவ்வூருக்கு டால்மியாபுரம் என்று பெயரிட்டனர். அவ்வூர் ரயில் நிலையத்தில் டால்மியாபுரம் என்று இருந்த பெயர் பலகையில், தார் கொட்டி அழித்து கல்லக்குடி என்று மீண்டும் பெயர் சூட்டினார் திமுகவினர். இதற்கு தலைமை தாங்கிவர் கருணாநிதி மற்றும் கண்ணதாசன் இருவருமே. இப்போராட்டத்தில் ரயில் மறியல், கைது, தடியடி, துப்பாக்கிச் சூடு, காயம், மரணம், என்று எல்லா சம்பவமும் அரங்கேறின. கருணாநிதியும் கண்ணதாசனும் கைது செய்யப்பட்டனர். போராட்டக் காலத்தில் மக்களை சிறப்பாக கூட்டி மொழிப்போர் செய்தவர்கள் என்றும் தியாகிகள் என்றும் போற்றப்பட்டனர்.

1950-களில் இந்தி எதிரிப்புப் போராட்டம் தொடர்ந்தது. அதனுடன் தனித் தமிழ் நாடு வேண்டும் என்றும் போராடினர் திமுகவினர். இதனிடையே ஜனவரி 1956-இல் ராஜாஜியுடனும் ஈவே ராமசாமியுடனும் அண்ணாதுரை சேர்ந்து கொண்டு ஆங்கிலமே அரசு மொழியாக தொடர வேண்டும் என்று தமிழ் கலாச்சாரக் கலைக்கூடம் (Academy  of  Tamil  Culture) மூலமாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் பின் செப்டம்பர் 1957-இல் இந்தி எதிர்ப்பு போராட்ட மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. திமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட அம்மாநாட்டில் 13 அக்டோபர் 1957 தினத்தை இந்தி எதிர்ப்பு தினமாக கடைப்பிடிப்பது என முடிவானது.

இதைத் தொடர்ந்து 31 ஜூலை 1960 அன்று கோடம்பாக்கத்தில் ஒரு மாபெரும் போராட்ட மாநாட்டை மற்றுமொரு முறை திமுகவினர் நடத்தில் தம்பலத்தைக் காட்டிக் கொண்டனர்.

இவற்றின் நடுவில் 1962 போது நிகழ்ந்த இந்திய-சீன போரினாலும்,  இந்திய அரசியலமைப்பின் 16-ஆவது சட்டத் திருத்த மசோதாவினாலும் திமுக தனித்த தமிழ்நாடு என்ற பிரிவினைவாதக் கொள்கையை காய் விட்டது.

ஆனால் இதன் பின்னரும் தனது இந்தித் திணிப்பு எதிர்ப்பு நிலையைத் திமுக தொடர்ந்து கொண்டே இருந்தது. 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைந்தது. இந்தி பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்ற கூற்றுக்கு திமுகவின் நிலைப்பாடு அண்ணாதுரை இந்த பதிலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்: “பெரும்பான்மை எண்ணிக்கைகளால் இந்த மாதிரி முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்கலாகாது; காகமாகத்தான் இருந்திருக்க வேண்டும்”

1957-இல் முதல் முதலாக தேர்தல் களமிறங்கிய கருணாநிதி குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்றார். அங்கு சேலம் தொகுதியில் நெடுஞ்செழியன் தோல்வியைத் தழுவினார். 1962-இல் எஸ் எஸ் ராஜேந்திரன் என்கிற நடிகர் தேனீ தொகுதியில் NR தியாகராஜன் என்ற பிரபல காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி கொண்டார்.

கட்சி தொடங்கிய 18 வருடங்களில் ஆட்சியை பிடித்தது திமுக … தேர்தலில் முதல் பங்கேற்பு 10 வருடங்கள் முன்பு தான் என்றாலும் ஆட்சிக்கு வந்த திமுக மதராஸ் மாகாணத்தில் “திராவிட ஆட்சியை மலரச் செய்தது”. 1967-இல் நடந்த மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒன்பது மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. இதில் மதராஸில் மட்டுமே ஒரு எதிர்க்கட்சி அறுதிப் பெரும்பான்மையின் மூலம் ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. காங்கிரசில் பிளவு ஒன்று உருவானது. அதன் முக்கியத் தலைவர் ராஜாஜி ஆவார். அவர் சுதந்திர கட்சி என்று ஒரு கட்சியை தொடங்கினார். அது மட்டும் இல்லாமல் எதிர் கட்சி ஓட்டுக்கள் எல்லாம் சிதறக் கூடாது என்பதற்காக பல்வேறு எதிர் கட்சிகளை கூட்டணி மூலம் ஒன்று படுத்தி காங்கிரசிற்கு எதிரான ஓட்டுக்களை எல்லாம் சேர்த்து காங்கிரசை தோற்கடிக்க உதவி செய்தார். 

காலம் கடந்த பின், தான் அவ்வாறு செய்தது மிகத் தவறு என்று உணர்ந்து வேதனை அடைந்தார் ராஜாஜி என்பது இந்த நிகழ்வின் மற்றொரு அத்தியாயம்.

அண்ணாதுரை சீர் திருத்தத் திருமணங்களை, இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் அங்கீகாரம் அளித்து சட்டப்படி செல்லுமென்று ஆக்கினார். சீர் திருத்தத் திருமணங்களில் புரோகிதர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் பிராமணர் ஒருவரின் மூலம் திருமணம் நடை பெறும் என்ற வழக்கம் ஒழிந்தது. சீர் திருத்தத் திருமணங்களை கொண்டு வர ஈ வே ராமசாமி அரும்பாடு பட்டார். அவர் வழக்கமான திருமணங்களையும், அவற்றினிடையே இருந்த வரதட்சிணையையும் ஒரு பணப் பரிமாற்றமாகவே கண்டார். அதனால் மணமகள் குடும்பங்களுக்கு உண்டான மனா உளைச்சலை வெறுத்தார். ஈவேரா மனத்தில் சீர் திருத்தத் திருமணங்களால் காதல் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து, வழக்கமான திருமணங்களின் எண்ணிக்கை குறையும் என்ற எண்ணம் அழுத்தமாக பதிந்திருந்தது.

இதே போல் ரூபாய்க்கு படி அரிசி என்று வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்தார் அண்ணாதுரை. வந்த பின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும் செய்தார். அவ்வாறு செய்தது அரசு கஜானாவைக் கடித்த பின் அதை பின் வாங்கவும் செய்தார். தேர்தல் சமயத்தில் அரிசியின் விலை பற்றி போலி வாக்குறுதி கொடுப்பது இன்றும் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. இவ்வாறே இந்தி எதிர்ப்பு, பிராமண வெறுப்பு போல் போலி வாக்குறுதி மற்றும் இலவச வீட்டுப்பொருள் திட்டம் என்று தனது நடைமுறை மற்றும் யுக்திகளை திராவிட முன்னேற்ற கட்சி கடைப்பிடித்துக் கொண்டே இருக்கிறது.

மதராஸ் மாகாணம் முதல் தமிழ் நாடு வரையான பயணம் 14 ஜனவரி 1969 அன்று தொடங்கி முடிவுற்றது … 3 ஜனவரி 1968 அன்று அமோகமாக நடந்த உலகத் தமிழ் மாநாடு பற்றி வெளியிடப்பட்ட சிறப்பு தபால் தலையில் இந்தியில் குறிக்கப்பட்ட வினோதம் அண்ணாதுரைக்கு மிகுந்த வேதனையும் கோபமும் தந்தது. இதே சமயத்தில் அண்ணாதுரை தமிழக அரசு அலுவலகங்களிலும் பொது கட்டிடங்களிலும் மதம் மற்றும் கடவுள்  சம்பந்தப் பட்ட எந்தவொரு குறிப்போ படமோ சிலையோ இருக்கக் கூடாதென்று ஒரு அரசு குறிப்பும் வெளியிட்டு உத்தரவு பிறப்பித்தார்.

தமிழகத்தின் அழிவு காலம் என்று கருங்காலம் 1969-ஆம் வருடம் கருணாநிதி முதல்வர் பதவிக்கு வந்த உடன் ஆரம்பித்தது என்றே சொல்லலாம். அக்கருங்காலம் 2018-இல் அன்னாரின் மறைவு வரை நீடித்தது என்றும் கொள்ளலாம்.

திமுகவின் தலைவராக 1969-ஆம் வருடம் பதவியேற்ற கருணாநிதி தன மறைவு வரைக்கும் அப்பதிவியில் வீற்றிருந்தார். அவ்வப்போது (ஐந்து முறை) தமிழக முதல்வராகவும் இருந்து வந்தார். கருணாநிதியின் திமுகவிற்கு ஐந்து கொள்கைகள் இருந்தன என்று சொல்வர் – அவை என்னவென்றால்:

(1) அண்ணாதுரையின் வழித்தடத்தில் செல்வோம்

(2) ஒரு சமச்சீர் சமுதாயம் உருவாக்குவோம்

(3) என்றென்றும் இந்தியின் திணிப்பை எதிர்ப்போம்

(4) ஏழ்மையை அமைதியின் வழியில் நீக்குவோம்

(5) கூட்டாட்சியின் மூலம் மாநில சுயாட்சி பெறுவோம்

இதன் நடுவே, இந்திரா காந்தி அம்மையாரிடம் பேசிப் போராடி மாநிலங்களின் முதல்வர்களும் தேசிய கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தார் கருணாநிதி. 1974-ஆம் வருட சுதந்திர தினத்தன்று (அப்போது மெட்ராஸ் எனப்பட்ட) சென்னையில் கொடியேற்றிய முதல் தமிழக முதல்வர் என்ற பெருமையும் பெற்றார்.

இச்சமயம், தனக்கு போட்டியாக, தன குடும்ப அரசியலுக்கு இடையூறாக இருக்கிறார் என்று கருணாநிதி கருதிய MGR திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். MGR திமுகவிற்கு ஓட்டு வாங்கித் தந்த ஒரு மிக முக்கியுமான கருவியாக இருந்தார்.

1977-ஆம் வருடம் திமுகவின் வீழ்ச்சியை ஆரம்பித்த வருடம் என்றால் மிகை ஆகாது. பதவிக்கு வந்த MGR தந்த ஆட்சி திமுகவின் ஆட்சியை விட நன்றாகவே வந்தது என்று தமிழர்கள் கருதினர். காலம் செல்லச் செல்ல அதிமுகவினரும் திமுகவினருக்கு நிகர் தான் என்று உணரும் வண்ணம் அதிமுகவினர் நடந்து கொண்டாலும், ஜெயலலிதா அம்மையார் அதிமுகவினரை கட்டுக்குள் வைத்திருந்தார் என்பது ஒரு உண்மை என்று கூறுவார் அரசியல் ஆய்வாளர்கள்.

ஆட்சிக்காலத்தின் போக்கை ஆராய்ந்து பார்த்தல், அந்த நரித்தனம் கொண்ட கருணாநிதி ஒரு பதவி வெறி பிடித்தவர் என்று அறிவோம். மற்றோர் மற்றும் வேறு எதுவும் எக்கேடு போனால் என்ன என்ற ஒரு போக்கையும் காண முடியும். கடைசிக் காலத்தில் அந்த வெறி ஒரு வில்லத்தனத்தையும், ஒரு கொடுங்கோல் மனப்பான்மையையும் கொண்டு வந்தது என்பது நிதர்சனம்.

அரசு பணியில் உள்ள ஊழியர்கள் எல்லாரும் இந்த இரு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியின் தொண்டர்களோ அனுதாபிகளோ தான். தமிழக மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து கொடுத்து மாநிலத்தின் கஜானா கலியாக்கப்பட்டது.  பிஹாரில் மாட்டுணவு ஊழல் புகழ் லாலு யாதவ், உத்தர பிரதேசத்தில் செருப்பிலிருந்து சிலை வரை ஊழல் செய்த செல்வி மாயாவதி, அதே உத்தர பிரதேசத்தில் எதைத் தொட்டாலும் ஊழலும் அடிதடியும் செய்த முலாயம் யாதவ் மற்றும் குடும்பத்தார், இல்லை இப்போது  தில்லியில் வை-ஃபை, மொஹல்லா மருத்துவமனை, உலகத் தர கல்வி, இலவச மெட்ரோ பயணம், இலவச மின்சாரம், இலவச தண்ணீர் வசதி என்று ஊழல் செய்து வரும் அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோருக்கு முன்னோடியாக, அறிவியல்-பூர்வமான ஊழல் செய்தவர்கள் என்று பெயரும் புகாஸும் பெட்ரா பெருமை கருணாநிதிக்கும் அவர் கட்சியினருக்கும் உண்டு.

ஊடகங்களை மிரட்டி தன வசம் வைத்துக் கொள்வது, வீடு மற்றும் மனை ஆக்கிரமிப்பு செய்வது, அடிதடியில் சிறந்து விளங்குவது, கட்டை பஞ்சாயத்து செய்வது என்று இவர்கள் செய்த அட்டூழிய லீலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் மிக எளிமையாக ஒரு கூச்சமோ வெட்கமோ வருத்தமோ இல்லாமல் செய்பவர்கள் திமுகவினர் என்று ஆராய்ந்து கூர்ந்து பார்த்தல் தெரிந்தும் கொள்ளலாம்.

அவரின் இந்து-மத எதிர்ப்பு கொள்கை ஒரு பிராமண எதிர்ப்பு கொள்கையாக உரு மாறி, பிராமணர்களை அடித்து உதைத்து அவமானப் படுத்தி வாழ்வதில் குறியாக இருந்தது. இவற்றோடு சேர்த்து கிறிஸ்தவ இஸ்லாமிய மக்களை ஒரு வோட்டு வங்கியாக மாற்றி அவர்களின் வேண்டுதல்களை தன தலை மேல் கொண்டு செய்து முடித்து புது வித மதச் சார்பு அரசியல் முறையை உருவாக்கினார். ஹிந்துக்களை ஜாதிச் சண்டை மற்றும் பிரிவினையில் உழலச் செய்து, தன்வழிப் பிரச்சாரம் விடாமல் செய்து வந்ததினால் மற்ற எல்லாருக்குமே பிராமணர் ஒரு வேலை தங்கள் உரிமைகளை பறித்துத் தான் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் வரச் செய்தது திமுகவினரின் கள்ள புத்திசாலித்தனமே!

இந்த பின்னணி தெரிந்து கொண்ட பின்னரே நாம் திமுகவை தோல்வியைத் தழுவச் செய்ய வேண்டும் என்பதை முழுவதுமாக உணர்ந்து செயல்படுவோம். அவர்கள் தோல்வியுறா விட்டால் தமிழகம் என்றென்றும் இருட்டில் தான் இருக்கு. ஹிந்துக்களும் தங்கள் எதிரில் திமுகவே என்று தெரிந்து கொள்ள வேண்டும். திமுகவினால் ஹிந்துக்களுக்கு ஒரு பலனும் கிடையாது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து அறிந்து கொண்டால் திமுகவின் தோல்வி உறுதி.

Author

By SWAMINATHA Sharma

Follow him @anexcommie

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

six − six =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App

© 2018 | All Rights Reserved

To Top
WhatsApp WhatsApp us