விஜயகாந்துக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மீண்டும் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதால், வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனிடையே, மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.,