தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முதலில் பேட் செய்த தில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம், தில்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தில்லி அணித் தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளும், நோர்க்கியா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.