அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: கொரோனா இறப்புகளை இந்தியா துல்லியமாக கொடுக்கவில்லை – டொனால்டு டிரம்ப்
அமெரிக்கா
ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெறும் இந்த விவாதம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கியது.
90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் டிரம்பும் -ஜோ பிடனும் அனல் தெறிக்கும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் ஒருவரை ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
உலகில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புகளை அமெரிக்கா பதிவுசெய்வது குறித்த கவலைகள் குறித்து டிரம்ப் விவாதத்தின் கொரோனா இறப்புகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
“கொரோனா இறப்புகளை இந்தியா துல்லியமாக கொடுக்கவில்லை” என்று டிரம்ப் விவாத நடுவர் கிறிஸ் வாலஸிடம் பிடன் முன்னிலையில் கூறினார்.