வரும் 15ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகளுக்கு பூங்காவுக்கு செல்ல அனுமதியில்லை.
* 6 மீட்டர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,
* பணிபுரியும் ஊழியர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
* அனைத்து பகுதிகளையும் முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளம் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
* குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
* ஆன்லைன் முறையில் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* கூட்டத்தை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிக்க வேண்டும்,
* 24 டிகிரி முதல் 30 டிகிரி வரையிலேயே குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பார்வையாளர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை ஆகியவற்றை டிக்கெட்டில் அச்சடிக்க வேண்டும்.
* பூங்காக்களில் இருக்கும் உணவு கூடங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
