கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரத்து 943ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 108ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 448 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 35 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பில், கோவை மாவட்டத்தின் அளவு 5 புள்ளி 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இன்று 5 ஆயிரத்து 718 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 86 ஆயிரத்து 454ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைபவர்கள் விகிதம், 91 புள்ளி 49 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 87 ஆயிரத்து 341 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 80 லட்சத்து 44 ஆயிரத்து 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 5 புள்ளி 95 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
