சென்னையில் உள்ள பள்ளிகளின் நிலவரம் ..
தெலுங்கு மீடியம் 49
உருது மீடியம் 24
ஹிந்தி மீடியம் 12
மலையாள மீடியம் 4
குஜராத் மீடியம் 4
சம்ஸ்கிருத மீடியம் 1
இதில் உருது தவிர்த்து மற்ற மொழிகளை தனியார் பள்ளிகள் மட்டுமே நடத்துகின்றன . இவை பெரும்பாலும் மும்மொழி திட்டத்தை கொண்டுள்ளன . (தமிழ் ,ஆங்கிலம் , மற்றும் சிறப்பு மொழி )
உருது மொழி பள்ளிகள் 24. இவற்றில் 5 அரசு பள்ளிகள் .
எக்மோரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தமிழ் உருது ஆங்கிலம் என்று மும்மொழி உள்ளது . , திருவல்லிகேணி அரசு பள்ளியில் உருது மீடியம் மட்டுமே உள்ளது . மற்ற மூன்று அரசு பள்ளிகளில் உருது மற்றும் ஆங்கில மீடியம் மட்டுமே . தமிழ் கிடையாது.
கோயம்புத்தூர் மாவட்டம் வடுகண்காளிப்பாளையத்தில் பஞ்சயாத்து யூனியன் பள்ளியில் உருது மீடியம் மட்டுமே. தமிழ் கிடையாது.
ஈரோடு மாவட்டத்தில் 40 அரசு பள்ளிகளில் கன்னட மீடியம் உள்ளது . இவற்றில் பெரும்பாலானவற்றில் தமிழ் மீடியம் கிடையாது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 415 பள்ளிகளில் தெலுங்கு மீடியமும் 22
பள்ளிகளில் கன்னட மீடியமும் உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அரசு பள்ளிகள் , சில அரசு பள்ளிகளில் தெலுங்கு , கன்னடம், ஆங்கிலம் என்று மும்மொழி உள்ளது . தமிழ் , மொழிப்பாடம் கூட கிடையாது.
விழுப்புரம் மாவட்டத்தில் 26 உருது மீடியம் பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் தமிழ் கிடையாது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரியா மற்றும் அசாம் மொழி அரசு பள்ளிகள் உள்ளன. இவைகளில் தமிழ் ஆங்கிலம் உண்டு. இவை மும்மொழி பள்ளிகள் .
வேலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகள் தமிழ், தெலுங்கு ,ஆங்கிலம் என்று மும்மொழியை பயிற்றுவிக்கின்றன .உருது மீடியம் பள்ளிகள் வேலூரில் 124 உள்ளன. தெலுங்கு மீடியம் 11. இதில் சில அரசு பள்ளிகளும் அடக்கம். இவை பெரும்பாலும் மும்மொழி பள்ளிகளாகவோ அல்லது தமிழ் மீடியம் இல்லாத பள்ளிகளாகவோ இருக்கின்றன .
கடலூர் மாவட்டத்தில் இரண்டு உருது மொழி தனியார் பள்ளிகள் உள்ளன, இவற்றில் தமிழ் கிடையாது.
தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும்தான் இருமொழி கல்வி . மற்றவர்களுக்கு அது இல்லை . இதுவே திராவிட கட்சிகளின் கொள்கை.
வாழ்க .. .வளர்க ….
Source : studyapt.com