சென்னை விமானநிலைய உள்நாட்டு முணையத்திலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியாா் பயணிகள் விமானம் 79 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட தயாரானது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட தனிப்படை போலீசாா் அவசரமாக சென்னை விமானநிலையம் விரைந்து வந்தனா்.
முக்கிய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தை சோ்ந்த 3 குற்றவாளிகள் மும்பைக்கு விமானம் மூலம் தப்பி செல்ல உள்ளதாகவும், அவா்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விமானநிலைய மேலாளரிடம் தனிப்படை போலீசார் கூறினா்.
குற்றவாளிகளின் வழக்கு ஆவணங்கள், அவா்களை கைது செய்வதற்கான உத்தரவுகள் ஆகியவற்றையும் தனிப்படை போலீசாா் காட்டினா். லக்ஷ்மன் (30), அயூப்கான் (33), அமீா்முகமது (35) என்ற பெயா் பட்டியலையும் கொடுத்தனா். விமானநிலைய மேலாளா் அந்த பெயா்களை வைத்து ஆய்வு செய்தபோது, அவா்கள் 3 பேரும் போா்டிங் பாஸ் வாங்கி கொண்டு, பாதுகாப்பு சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறியிருப்பது தெரியவந்தது.
