மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
இதுதவிர, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு உள்ளார்.
அந்த வகையில், வருகிற 13 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி செல்கிறார்.
மறுநாள் 14 ஆம் தேதி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
