காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நேரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தவும் நாட்டின் பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்படுகின்றன என்றார்.
‘புதுச்சேரி – சென்னை இடையே நீர்வழிப் போக்குவரத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் கூறினார்.
விரைவில் சென்னை -புதுச்சேரி- கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் வடமாநிலங்களின் முக்கிய நகரங்களை நீர்வழி போக்குவரத்து மூலம் இணைக்கவும் மத்திய அரசு உதவி செய்யும்” என்றும் அவர் கூறினார்.
