சியாவிலே மிகப்பெரிய காய்கறி விற்பனை நிலையம் கோயம்பேடு காய்கறி சந்தை, இந்த சந்தையின் மூலமாக 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது . ஐந்து மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் முதல் படி படியாக கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. 2000 கடைகள் கொண்ட காய்கறி கடைகளில் நாள்தோரும் 600 லாரிகளில் காய்கறிகள் பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து வரும். ஆனால் தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களால் 200 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு 150 லாரிகளில் வரும் வெங்காயம், தக்காளி தற்போது 80 லாரிகளாக குறைந்துள்ளது. மேலும் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு முன்பு விடியற்காலை 2 மணிக்கு மேல்தான் காய்கறி விற்பனை தொடங்கும். அதனால் காய்கறி வியாபாரிகள் சங்கங்கள் காய்கறிகளின் வரத்தை வைத்து கூடி பேசி ஒரே விலையை நிர்ணயம் செய்ய முடியும். ஆனால் தற்போது இரவு 10 மணிக்கே வியாபாரம் தொடங்குகிறது. அதுவும் பகுதி பகுதியாகத்தான் விற்பனை நடைபெறுகின்றது.

மேலும், ஏலம் முறை குறைந்ததாலும் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறுவதாலும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் முறையை கடைபிடிக்க முடிவதில்லை என்றும் அதனால் காய்கறிகளின் விலை கடைக்கு கடை மாறுபடுவதாக காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
